No:9, 1st Main road, Swarnambigai Nagar, Aruneshwara Flats, Virugambakkam, Chennai
+91 98 777 888 02
info@bookmyiyer.com

ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம வரலாறு.

ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம வரலாறு.

இந்த கட்டுரையை எழுதியவர் விவரம் தெரியவில்லை.

நீண்ட பதிவு……ஆனால் அவசியம் அறிந்து கொள்ள வேண்டியது… 🙏🙏

திரிலோக சஞ்சாரியும் தமிழ் மொழியை உண்டு பண்ணித் தமிழ் வளர்த்தவரும் சிறந்த சித்தரும் ஆகிய

அகத்திய முனிவர்ஒருமுறை இமயமலைக்குச் சென்றார். அங்கு ஒரு இடத்தில் சில ரிஷிகள்

தலைக்கீழாக தவம் செய்து கொண்டிருப்பதைகண்டார். அகத்தியர் அவர்களை பார்த்து “ரிஷிகளே தாங்கள்

ஏன் இவளவு கடுமையான தவத்தைச் செய்து கொண்டு இருக்கீர்கள் ? காரணம் என்ன? ” என்று வினவினார்.

அதற்க்கு அந்த ரிஷிகள், பூலோகத்தில் எங்கள் பரம்பரையில் அகத்தியன் என்று ஒருவன்இருக்கிறான்.

அவனுடைய மூதாதையர் நாங்கள். அவனது ஊழ்வினை (ப்ராப்தம்) அவன் திருமணம் செய்துக்கொண்டு

ஒரு ஆண்குழந்தைக்கு தந்தை ஆகா வேண்டும். இல்லறத்தால் உண்டாகும் கஷ்டங்களையும்

இன்பங்களையும் அனுபவிக்க வேண்டும்என்பதாகும். அனால் அவனோ பிரமச்சரிய விரதம் பூண்டு

திருமணம் வேண்டாம் என்று உறுதியாக இருக்கிறான். அவன்அனுபவிக்க வேண்டிய கஷ்ட

நஷ்டங்களை நாங்கள் அனுபவித்துக் கொண்டு இருக்கிறோம் என்றனர். உடனே அகத்தியர்

அந்தரிஷிகளின் பாதங்களில் விழுந்து வணங்கி, அந்த அகத்தியன் என்பவன் நான் தான். எனக்காக

தாங்கள் துன்புற வேண்டாம். நான்திருமணம் செய்து கொள்கிறேன், ஒரு குழந்தைக்குத் தந்தையும்

ஆகிறேன், இது சத்தியம்” என்று வாக்குறுதி அளித்தார்.

உடனே அந்த ரிஷிகள் தவத்தை விட்டு விட்டு அகத்தியருக்கு ஆசி
வழங்கினர். பின்னர்
மகிழ்ச்சியுடம் பிதுர் லோகம் சென்றனர்.
அன்றிலிருந்து அகத்தியர் தனது பிரமச்சரிய விரதத்திற்கு குந்தகம்
விளைவிக்காத, தன்னை அனுசரித்து நடக்ககூடிய பெண் எங்கு இருக்கிறாள் என
மூவுலகையும் சுற்றி
தேடி வந்தார். அப்படித் தேடி வரும்போது பிரம்ம லோகத்திற்கும் சென்றார். அங்கு பிரம்மதேவர்
ஸ்ரீ விஷ்ணு மாயையை
ஓர் அழகிய கன்னிகையாக ஆக்கி வைத்திருந்ததைப் பார்த்தார். பிரம்மாவை வணங்கி விட்டுப்பூலோகத்திற்கு வந்து விட்டார். இது இப்படி
இருக்க…….

விதர்ப்ப தேசத்தில்
கவேரன் என்னும் அரசன் குழந்தை வேண்டிப் பல ஆண்டுகள் தவம் செய்தார். பலன் இல்லை. கடைசியாக மனைவியுடன் சேர்ந்து சிவ பெருமானைக் குறித்து கடுமையாகத் தவம்
செய்தார்.சிவபெருமான் அவர்முன் தோன்றி “இப்பிறவியில் உனக்கு புத்திர பாக்கியம்
இல்லை. ஆதலால்
வீணாக உன் உடலை
வருத்திக் கொண்டிருக்காதே. தவத்தை விட்டுவிடு” என்றார்.

கவேரரும் தவத்தைவிட்டுவிட்டு மனச் சோர்வுடன் வாழ்ந்து வந்தார். வயதும் ஆகிவிட்டது.

இந்நிலையில் அகத்தியர் பெண் தேடிக்கொண்டு விதர்ப்பமன்னன் கவேர ரிஷியிடம் வந்தார்.

கவேரரும் அவரது மனைவியும் அகத்தியர் திருவடிகளில் வீழ்ந்து வணங்கினர். அப்போதுஅவர்களது

சோகத்தைத் தனது சித்தியினால் அறிந்த அகத்தியர் “புத்திர பாக்கியம் உண்டாவதாக!” என்று

ஆசீர்வதித்தார்.இருவரும் திடுக்கிட்டு “ஸ்வாமி, எங்களுக்கு இப்பிறவியில் புத்திர பாக்கியம் கிடையாது

என்று சிவபெருமானே கூறிவிட்டார்,அப்படி இருக்க தாங்கள் புத்திர பாக்கியம் பெருக என ஆசீர்வதித்து உள்ளீர்கள். இது நடக்க கூடியதா,? நாங்களும் மிகுந்தவயோதிகர்கள் ஆகிவிட்டோம் , தங்கள் வார்த்தை பொயிக்கலாமா? என்று கண்ணீர் மல்க வினவினர்..அகத்தியர் புன்முறுவலித்துகூறுகிறார். “தாங்கள் கூறியது அனைத்தும் உண்மை. ஆனால் எனது தபோ வலிமையால் நான் இப்போது ஒரு பெண் குழந்தையை கொடுக்கின்றேன். இவளைத் தக்கவயதில் எனக்கே திருமணம் செய்து தர வேண்டும்” என்று கூறி தனது இரு கரங்களையும் முன் நீட்டி கண்மூடி, பிரம்மலோகத்தில் விஷ்ணு மாயையாக
உள்ள கன்னிகையைத் தனது தவ வலிமையால் அப்போது பிறந்த குழந்தையைப் போல் ஆக்கிகவேர அரச-அரசியின் கையில் கொடுத்தார். இவ்விஷயத்தை தெரிந்துக்கொண்டு தேவர்கள் அக்கொழந்தையைப் பார்க்க வந்தனர்.அக்குழந்தை பெண்ணிற்குரிய 64 லக்ஷணங்களும் நிறைந்து மிக அழகாகத் திகழ்வதைப் பார்த்து லோபாமுத்ரா (அறுபத்து நான்குலட்சணங்களும் குறையாதவளே)
எனப் பெயரிட்டு அழைத்தனர். கவேர அரசரின் மகளானதால் மக்கள் அவளைக் காவேரி என்று அழைத்தனர். காவேரி நாளொரு
மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வந்தால். இது நாள் வரையும் குழந்தை இல்லாததால் சோகமாக இருந்த கவேரரும் அவரதுமனைவியும் மிக்க
சந்தோஷத்துடன் அவளது மழலையையும், தவழ்ந்து நடப்பதையும் கேட்டும் பார்த்தும் ரசித்தனர்.

விஷ்ணுமாயையே பிராந்தி இருப்பதால் மிக விரைவிலேயே மழலை மாறி மிகத் தெளிவாக பேச ஆரம்பித்தாள், காவேரி.காவேரிக்கு ஏழுவயதாயிற்று. விதர்ப்ப நாடும் வளம் கொழிந்து விளங்கிற்று.

ஒரு நாள் ஸ்ரீ சர்யானந்தநாதர் என்னும் ஸ்ரீவித்யா குருவானவர்வந்து அரசனிடம் ” நான் சாதுர்மாஸ்ய விரதம் இருக்க விரும்புகிறேன், ஆதலால் உன்னுடைய நந்தவனத்தில் ஒருகுடிசையமைத்து என் கருத்தறிந்து பணிகள் செய்ய ஒரு பணியாளையும் ஏற்படுத்தி தருவாயாக!” என்று கூறினார்.

அரசர் சிந்தித்தார். சர்யனந்தநாதரோ மிகவும் கோபக்காரர். நந்தவனத்தில் பர்ணகசாலை அமைத்து கொடுத்துவிடலாம். இம்முனிவர்கருத்துணர்ந்து பணி செய்ய ஆட்களுக்கு என்ன
செய்யலாம்? நாமே செய்யலாம் என்றால் அதிக வயசாகிவிட்டது. அரசிக்கும்வயதாகி விட்டது. இக்கட்டில் மாட்டிக் கொண்டோமே என்ன செய்வது என மனவருத்தத்துடன் மிகவும்
சோகமாக இருந்தார். இவ்வாறு தாய் தந்தையர் சோகமேஉருவாக இருப்பதைப் பார்த்த
லோபாமுத்திரை அவர்களைப் பார்த்து ஏன் வருத்தமாக இருக்கிறீர்கள்? இது நாள் வரை
தங்களைநான் இவ்வாறு பார்த்தது இல்லையே ? என்ன காரணம்? என வினவினாள்.அரசர்
“காவேரி! கண்மணி! நமது நந்தவனத்தில் தவம்இயற்ற ஒரு முனிவர் வந்துள்ளார். அவரது

மனம் அறிந்து பணியாற்ற ஒரு பணியாளும் கிடைக்கவில்லை. வயோதிகர்களாகிய

எங்களாலும் இயலாது. என்ன செய்வது? அவருக்கோ சீக்கிரம் கோபம் வந்து சாபமிட்டுவிடுவார்.

அதுதான் பயமாக உள்ளது “என்றார்.உடனே லோபாமுத்திரை “நான் உள்ளேன்,

ஏன் கவலைப் படுகிறீர்கள்? நான் அவர் மனமறிந்து பணிவிடைகள் செய்துஅவரை

மகிழ்விப்பேன் ” என்றால். “எங்களுக்குத் தெரியும், நீ மற்ற குழந்தைகள் போல அல்ல.

தெய்வ குழந்தை, இருந்தாலும்இவ்வளவு காலம் குழந்தை இல்லாதிருந்து. இப்போது தான் உன்னால் அக்குறை நீங்கி மகிழ்ச்சியாக இருக்கிறோம்.

நீ அவருக்கு பணி செய்யும் பொது சிறு பிள்ளைத் தனமாகஏதாவது தவறு செய்து விட்டால் அவர் சபித்து விடுவாரோ என்று பயமாக இருக்கிறது” என்றனர்.ஒரு குறையும் வராமல் நான்பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்லியவாரே இரண்டு சேடியருடன் முனிவரின் தவச் சாலைக்கு சென்று அவர் பாதம் பணிந்துநல்ல பணி செய்ய என்னை வாழ்த்தி அருள்செய்வீர் என்று பணிகள் செய்ய ஆரம்பித்தால். காவேரிதேவியின் பணிவிடையால்மனம் மிக மகிழ்ந்த சர்யானந்தநாதர் லோபமுத்திரைக்கு ஸ்ரீவித்தையை உபதேசித்து இவ்வித்தையை செபித்து வந்தால் உனக்குஎல்லா சிரேயசும் உண்டாகும், எல்லா சித்திகளும் பெற்று நினைத்த உருவம் பெறலாம். இவ்வித்தை ஞானத்தைஅளிக்கக்கூடியது என்று ஸ்ரீவித்தையின் பெருமையைச் சொல்லி ஆசீர்வதித்து சாதுர்மாஸ்ய விரதத்தை முடித்து அரசன்அரசியை ஆசீர்வதித்து சென்றார். அன்றிலிருந்து லோபாமுத்திரை ஸ்ரீவித்தையை இடைவிடாது ஜெபித்து சகல சித்திகளையும்

ஞானத்தையும் பெற்றுச் சிறந்து விளங்கினாள். காவேரி தேவிக்கு 16 வயது ஆயிற்று.

அகத்தியர் விதர்ப்ப தேசத்து கவேரஅரசரிடம் வந்து உனது பெண்ணைக் கன்னிகா தானம்
செய்து கொடு என்று கேட்டார். அரசனும் அரசியும் மகளைப் பிரிந்துஇருக்க வேண்டுமே, பதினாறு வருடம் வளர்த்துக் காடும் மழையும் சுற்றித் திரியும் இம்முனிவருக்குத் திருமணம்
செய்துகொடுத்தால் இது நாள் வரையும் ஒரு துன்பமும் சிறிதும் அறியாத இவள் கஷ்டப்பட
வேண்டுமே என்று மனம்வருந்தினர்.காவேரி அவர்கள் மனதைத் தேத்தி என்னைத் திருமணம் செய்துக்கொள்ளதானே குழந்தை இல்லாத உங்களுக்குஅக்குறையை போக்கி என்னைக்

குழந்தையாகக் கொடுத்தார்? அப்போது சம்மதித்து விட்டு இன்று மனவருத்தம் அடைந்துகண்ணீர் விடுவது சரியல்ல. எனக்கு ஒரு குறையும் வராது. தாங்கள் அவருக்கு வாகளிதபடி என்னைக்

கன்னிகாதானம் செய்துகொடுங்கள் என்று கூறி அவர்கள் மனதைத் தேற்றினாள். அகத்தியர்

லோபாமுத்திரை திருமணம் சிறப்பாக நடந்தேறியது. ஆடைஆபரணங்களைக் களைந்து மர உரி தரித்து அகத்தியருடன் லோபாமுத்திரை புறப்பட்டாள். கண்களில் நீர்மல்க கவேரரும் அவரது

மனைவியும் சேடியரும் நாட்டு மக்களும் வழியனுப்பி வைத்தனர். அவ்விருவரும் பாரத நாடு

முழுவதும் உள்ள தளங்களுக்குசென்று மூர்த்தி தலம் தீர்த்தம் ஆகியவற்றை தரிசித்து நீராடிக்

கடைசியாக காஞ்சிபுரம் வந்தடைந்தனர். காஞ்சிபுரத்தில் பகவான்ஹயக்ரீவர் சாட்சாத்

காமேஸ்வர-காமேஸ்வரியிடம் ஸ்ரீவித்தை உபதேசம் பெற்று காமட்சியம்மனுக்கு

ஸ்ரீவித்யா உபாசனைமுறைப்படி நவாவரண பூஜை ஸ்ரீவித்யா ஜபம், ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம

த்ரிசதீ நாம அர்ச்சனைகள், ஆராதனைகள் செய்துகடைசியில் லோபாமுத்திரையையே

சுவாசினி பூஜை செய்து வந்தார். இது அநேக வருடங்களாக நடந்து கொண்டிருக்கிறது.

ஹயக்ரீவர் செய்யும் பூஜையைத் தரிசிக்க முப்பது முக்கோடிதேவர்களும் வருவார்கள்.

காஞ்சிபுரத்திற்கு வந்த அகத்தியர் காமாட்சியாம்மனைத் தரிசிக்க சென்றார். வழியில் வந்த தேவர்கள்அவரைப் பார்த்து நீங்கள் எவ்வளவுக் பாகியவான். உங்கள் மனைவி

லோபாமுத்திரையை சாட்சாத் விஷ்ணு பகவானாகியஹயக்ரீவர் தினந்தோறும் தான்
செய்யும் பூஜையின் கடைசியில் அம்பிகையாகப் பாவித்து பூஜை செய்கிறார். அவரும்
அப்பூஜையை ஏற்று அவரை ஆசீர்வதிக்கின்றார். என்ன அதிசயம்? பூஜையின் முடிவில்
மனைப் பலகையைப் போட்டதும்லோபாமுத்திரை வருகிறார். பூஜை முடிந்ததும் மறைந்துவிடுகிறார் என்றனர். அகத்தியர் இல்லை இல்லை. அது என் மனைவிஇல்லை. நீங்கள்
வேறு யாரையோ பார்த்து என் மனைவி லோபாமுத்திரை என்று தவறாக எண்ணி உள்ளீர்கள்.
எனது மனைவிதிருமணம் செய்து கொண்ட நாளிலிருந்து ஒரு நிமிடம் கூட என்னைப் பிரிந்து இருந்தது கிடையாது. அவள், ஒரு மனைவிகணவனின் சொல்லைத் தட்டாமல் கணவன்
குறிப்பறிந்து எவ்வாறு நடந்துக் கொள்ள வேண்டுமோ அவ்வாறே நடந்துகொள்கிறாள். நீங்கள் கூறுவது தவறு என்று மறுத்தார். தேவர்கள் இல்லை இல்லை நாங்கள் கூறுவது சரிதான்.

தாங்களே நேரில்வந்து பாருங்கள் என்று கூறினார். என்ன ஆச்சரியம் !!!! தேவர்கள் கூறியது
போலவே பூஜையின் முடிவில் சாட்சாத்லோபாமுத்திரையே நேரில் வந்து ஹயக்ரீவரால்
கொடுக்கப்பட்ட குலாம்ருதத்தை சிறிது பருகிவிட்டு மீதத்தை கொடுக்க, அதைஹயக்ரீவர் பய
பக்தியுடன் வாங்கி அருந்தி, எல்லோருக்கும் பிரசாதமாக கொடுத்தார். அதை அகத்தியர்

உற்று உற்று பார்த்து”ஆமாம் லோபாமுத்திரையேதான்”. இது அநேக வருடங்களாக

நடைபெறுவதாக தேவர்கள் கூறினார்கள். ஆனால் அவளோநம்மை விட்டு ஒரு நிமிடம் கூடல்

பிரியாமல் கூடவே தான் இருந்தால். சித்தி பெறுவதற்காக ஜபமோ, தவமோ செய்து நான்ஒரு

நாளும் பார்க்கவில்லையே? இது எப்படி முடியும்? என ஆச்சரியப்பட்டார்.

பரணக சாலைக்கு வந்து லோபாமுத்திரையிடம் நீ ஹயக்ரீவர் செய்யும் சுவாசிநீ பூஜைக்கு போகிறாயா? சித்தி எப்படிஉண்டாயிற்று ? நீ தவமோ, த்யானமோ, ஜெபமோ செய்து நான் பார்க்கவே இல்லையே ? என்று கேட்டார். அதற்க்குலோபாமுத்திரை “எனக்கு 7 வயது இருக்கும் போது எங்கள் நாட்டிற்கு சர்யானந்த நாதர் என்னும் முனிவர் சாதுர்மாஸ்யவிரதத்திற்கு
வந்தார். அவருக்கு மனம் குளிரப் பணிவிடைகள் செய்தேன். அதனால் மகிழ்ந்த அவர் ஸ்ரீவித்யா மந்திரத்தைஉபதேசித்தார். அன்றிலிருந்து இடைவிடாது அம்மந்திரத்தை ஜெபித்து வருகிறேன். அம்மந்திர மகிமையால் எனக்கு நினைத்தஉருவம் எடுக்கக்கூடிய ஆற்றல் கிடைத்தது என்றார்.

நானும் நிறைய கேள்விப்பட்டுள்ளேன். படித்துள்ளேன். எல்லாமந்திரங்களையும் விட மிக

உன்னதமான மந்திரம் ஸ்ரீவித்தையே என்ரும் . ஆனால் நீ அம்மந்திரத்தின் மகிமையால்

எம்முயற்சியும் இன்றி சித்திகளையும், மேன்மைகளையும் பெற்றுள்ளாய் என்பதை
நேரடியாகக் காண்கிறேன். எனக்கு அந்தமந்திரத்தை உபதேசிக்கிறாயா? என கேட்டார்.

மனைவியிடத்தில் கணவன் உபதேசம் பெறுவது சரியல்ல. மனைவிதானேசொன்னாள் அவ்வளவு சிறப்பாக இருக்காது. அது மட்டுமல்ல. தங்களுக்கு உபதேசிப்பதர்க்காகவே இங்கு

ஹயக்ரீவர் காத்துக்கொண்டிருக்கிறார். அம்பிகை கட்டளை. தங்களுக்கு உபதேசித்த பிறகுதான்
அவருடைய இவ்வுருவம் மறைந்துவைகுண்டத்திருக்குச் செல்ல வேண்டும் என்பது.

ஆகவே அவரிடம் சென்று உபதேசம் பெறுங்கள் என்று சொல்லிவிட்டார்.

சிலநாட்கள் கழிந்தன. லோபாமுத்திரை அகத்தியரைப் பார்த்து “என்ன? உபதேசம் பெற்றுக்
கொண்டீர்களா? என்ன என்ன உபதேசம்செய்துள்ளார்? இன்னும் எவ்வளவு பாக்கி உள்ளது?” என்று கேட்டார். என்ன? உபதேசமா? கூட்ட நெரிசலில் அவர் சமீபம்செல்லவே முடியவில்லை.

நான் வேறு குள்ளன். எல்லோரும் வணங்கியதும் கை அசைத்து உட்கார சொல்லிவிடுகிறார்.அவ்வளவுதான். கிட்டவே போக முடியவில்லை என்றார் அகத்தியர்.

“நாளை நீங்கள் சென்று எல்லோரும் அமர்ந்த பின்னரும்நின்று கொண்டே இருங்கள்.

ஹயக்ரீவர் ஏன் நிற்குரீர்கள் என கேட்பார். அப்போது லோபாமுத்திரை அனுப்பினாள் என்றுகூறுங்கள்”

என்று உபதேசம் பெற வழி சொல்லி அனுப்பினாள் காவேரி.லோபாமுத்திரை சொல்லியவாரே

அகத்தியரும் தேவர்கள்எல்லோரும் அமர்ந்த பின்னரும் நின்றுக்கொண்டே இருந்தார்.

ஹயக்ரீவர் பார்த்து ஏன் நிற்கின்றீர்? உட்காரும் எனக் கூறியபோது, லோபாமுத்திரை அனுப்பினாள்

என்றார். “அப்படியா? வாரும் வாரும், உங்களுக்காகத்தானே இத்தனை நாட்கள்

காத்துக்கொண்டுள்ளேன். முதலிலேயே சொல்லி இருந்தால் இதற்குள் எல்லாவற்றையும்

உபதேசித்து விட்டு வைகுண்டம்சென்றிருப்பேனே? பரவாயில்லை இன்றிலிருந்து ஆரம்பிக்கிறேன் என்று கூறி உபதேசிக்க ஆரம்பித்தார்.

ஹயக்ரீவர் என்ன என்ன உபதேசித்தார் என்பதை அகத்தியர் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம

மகாத்மியம் என்ற வரலாற்றில் பட்டியலிட்டுக் கூறுகின்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Need Help? Chat with us
Please accept our privacy policy first to start a conversation.