ஒரு மகத்தான சந்நிதி

சபரிமலைக்கு மற்றவர்கள் செல்லுகிறார்கள் என்று நாம் செல்லக்கூடாது. #சபரிமலை என்னைப் பொறுத்தவரை வாழ்க்கைக்கு வழிகாட்டி; நமது வாழ்க்கையை உயர செய்யும் ஒரு மகத்தான சந்நிதி.
சபரிமலைக்கு விரதம் இருப்பது ,நமக்குள் இறைவனை உணர ஒரு பயிற்சி. அங்கு. கேளிக்கைகளுக்கோ, ஆடம்பரத்திற்கோ,நாம் பெரியவர் என்பதை காட்டுவதற்கு இடமில்லை.
சில வருடங்களாக சபரிமலை அழைத்து செல்லுவது என்பது வியாபாரமாகிவிட்டது.
உல்லாச பயணத்திற்கு எத்தனையோ இடங்கள் இந்தியாவில் உள்ளது. அங்கு சென்று சந்தோஷமாக. இருங்கள். சபரிமலை என்கிற புனிதமான பூமியில் வேண்டாமே!!
காடும் மேடும் வீடும் வாசல்
கல்லும் முள்ளும் மல்லிகை மெத்தை
ஆடும் மனத்தை அடக்கி வா வா
ஐயன் மேடை நாடி வா வா
இருந்தால் உலகம் சுற்றி நிற்கும்
இழந்தால் எது தான் பற்றி நிற்கும்
குருவை நாடு மாலை சூடு
கோடி ஞான ஜோதியை பாடு.
என்பது போல் மிகுந்த பய பக்தியுடன் சபரிமலை விரதம் தொடங்கி யாத்திரை செய்வோம்.
இதுவரை வாழ்ந்தது கனவப்பா
இனி வரும் காலங்கள் உனதப்பா
எது வந்தபோதும் ஐயப்பா
நீ துணைவர வேண்டும் ஐயப்பா.
சபரிமலையில் பதினெட்டு படிகள் பதினெட்டு தத்துவத்தை குறிக்கும்.
சபரிமலை செல்வதே நம்மை நாம் உணருவதற்கே.
படியேறி நின்றால் கொடீமரம். அதன் மேல் ஐயன் குதிரை வாகனம். எதிரில் ஐயன் ஆலய வாயில் ;மேலே தங்க தகடுகள் சாற்றிய பொன்னம்பல வாசனின் பொன்னால் உருவாக்கப்பட்ட கோபுரம். அதில் தத்வமஸி பொறிக்கப்பட்டுள்ளது.
அருவமும் உருவமும் கொண்ட கடவுளின் தன்மை. தத்வமஸி – நீயே அது !
உள்ளே இருமுடி தாங்கி ஒருமனதாக ஐயனை நேத்ர தரிசனம் காண செல்கையில் சந்நிதானத்தில் கும்பலில் ஐயனை எட்டி பார்த்தால் ஐயன் கேட்கிறான்.
என்னைக் காண வந்தாயோ! !
உன்னைக் காண வந்தாயோ!!
இல்லை உன்னுள் உறையும் என்னைப் பார்க்க வந்தாயோ!!
எதைப் பார்க்க வந்தாய்! ! மனதில் பதில் இல்லை. ஏனென்றால் நம்மிடம் அது இருந்தால் தானே!!
அனைத்து உயிர்களுக்கும் பிறப்பிடங்கள் மூன்றே தான் – முட்டையிலிருந்து பிறப்பவை, உயிரிலிருந்து பிறப்பவை, விதையிலிருந்து முளைத்தெழுபவை.
“நோன்பிருந்து, புலன் அடக்கி உள் அன்போடு ஐயனை அழைத்தால்
அஞ்சேல் என அருள் தருவான் அருகில் வந்து “
அவனைக் காண சென்றேன். அவனோ என்னிடம் என்ன அதிசயத்தை காண வந்தாய் என்று கேட்டான். எல்லாமே நீ தான் உன்னுள் தானே என்றான்.
மனதில் ஒலித்தது.
கோடானு கோடி பேர் உனைத்தேடி வந்தாலும் கோடியில் எனைப் பார்த்து நலம் கேட்கிறாய்.
என்கிற பாட்டு மனதினை வருடியது.
ஆமாம். அந்த அனுபவத்தை என்னால் எழுத முடியாது.
சபரிமலை உச்சியிலே என்ன தான் அதிசயமோ என்று கேட்டால் ….என்ன..என்ன. . அதிசயம் இல்லை.
ஒவ்வொரு வருடம் சென்று வந்தப்பின் கிடைத்த மன அமைதியை சொல்வேனா; இல்லை வருடா வருடம் அவன் காட்டிய லீலைகளை சொல்வேனா; இல்லை அவன் வருடா வருடம் உயர்த்திய வாழ்க்கை தரத்தை சொல்லுவேனா; எதை எழுதினாலும் அதை எழுத முடியாது. உணரத்தான் முடியும்.
ஸ்வாமி சரணம் ஐயப்பா.