காதுகளால் நாம் அடையும் பயன்
ஒரு வேதமந்திரம் இப்படித் தொடங்குகிறது:
ப4த்3ரம்க1ர்ணேபி4ச்ருணுயாம_தே3வா:
(எங்கள் காதுகளால் நாங்கள் நல்லவற்றையே கேட்க வேண்டும்). அதன் தொடர்ச்சி “ப4த்3ரம் ப1ச்யேம அக்ஷபி4ர் யஜத்1ரா:” (எங்கள் கண்களால் நாங்கள் நல்லவற்றையே காணவேண்டும்). இந்தப் பிரார்த்தனைக்கு முத்தாய்ப்பாக அமையும் வாக்யத்தைக் கவனியுங்கள்:
ஸ்தி2ரைஹிஅங்கை3ஹிது1ஷ்டு1வாகு3ம்_ஸஸ்த1நூபி4ஹி
(“காதுகளும் கண்களும் ஒழுங்காக இயங்குமானால், பிற உறுப்புகளும், முழு உடலும், ஸ்திரமாக (தடுமாற்றம் இல்லாமல்) அவ்வவற்றின் போக்கில் இயங்கும்” என்பது இதன் பொருள்.)
இப்போது பதிவிற்குள் செல்லலாம்.
காது எதுக்கு இருக்கு என்று யாரையாவது கேட்டு பாருங்கள். கேட்பதற்குத்தான் என்பார்கள். ஆனால் காது இன்னொரு செயலையும் செய்கிறது. அது மிக, மிக முக்கியமானது.
உங்கள் கால்கள் தரையில் ஊன்றி நிற்பதற்குக் காரணம் காது தான், மனிதன் மயங்கி, சரிந்து விடாமல் மொத்த உடல் அமைப்பையும் சமநிலைப் படுத்த காது மிகவும் அவசியமாகிறது.
ஒரு ‘பைக்’ அதன் இரண்டு சக்கரங்களால் நிற்க முடியாதபோது, மனிதன் மட்டும் எப்படி இரு கால்களால் நிற்கிறான்?
பைக் நிற்கக் கூடுதலாக ஸ்டாண்ட் தேவைப்படுகிறது, அதனால் தன்னைத் தானே சமநிலைப் படுத்திக்கொள்ள முடிவதில்லை.
ஆனால் மனிதனால் அது முடிகிறது. அவன் உருவ அமைப்பு நிற்க முடியாத நிலையில் இருந்தாலும், எந்த சக்தி அவனை சமநிலையுடன் நிற்க வைக்கிறது என்றால் அது அவன் காதில் உள்ள ‘காக்லியா’ (cochlea) திரவத்தினால் தான். #இத்திரவத்தைக்காதில்உள்ள_ரசமட்டம் என்று கூறலாம்.
ஒரு பிணத்தை நிற்க வைக்க முடியாது. ஏன் எனில் அது சமநிலையை (balance) இழந்துவிட்டது.
காது கேட்பதற்கும் காக்லியா திரவம் உதவுகிறது. ஒலி அலைகளைக் காது மடல்கள் உள்வாங்கி, காக்லியாவை அதிர்வடைய வைத்து, அந்த அலைகள் பல ஆயிரம் நரம்புப் பின்னல்களின் ஊடாக (channels) அலைந்து, திரிந்து, மைக்ரோ நொடிக்குள் நமது மூளைக்கு ஓசை, ஒலிகளை உணர வைக்கிறது.
10 அல்லது 15 டெசிபல் (decibel) ஓசை அளவு காது கேட்கப் போதுமானது. அதை மீறும் போது காதில் பிரச்சினைகள் வரும்,
முதலில் மயக்கம், தலை சுற்றல் வாந்தி, தலை வலி எனத் தொடர்ந்து, இறுதியில் காது கேட்கும் திறன் குறைந்து விடும்.
காது மடல்கள் மிக அற்புதமான வடிவத்தில் ஆனவை. மண்ணெண்ணெய் ஸ்டோவில் funnel வைக்காமல் அப்படியே மண் எண்ணெய்யை ஊற்றினால் எப்படி சிதறி வீணாகுமோ, அதே போல், காது மடல்கள் இல்லா விட்டால். சத்தங்கள் நேரடியாகத் தலைக்குள் மோதி அதுவே நம்மைக் கொன்று விடும். அதிர்வுகள் அவ்வளவு வேதனை உண்டாக்குவதாக இருக்கும்.
அத்தகைய அதிர்வைத் தான் ஃபில்டர் செய்கிறது காது மடல்களும் அதைச் சுற்றியுள்ள சிக்கலான அமைப்புகளும் (complicated formations).
ஒரு மனிதன் இறந்த பிறகும் சில மணி நேரம் வரை, காது உயிர்ப்புடன் இருக்கும். (இறந்தவர்களின் காதுகளில், அந்த ஆத்மாக்களின் சற்கதிக்காக, #கர்ணமந்த்ரம் என்ற ஒன்றை, வலக்காதில் சொல்லும் வழக்கம் இன்றளவும் தொடர்வதைக் கவனிக்கவும். இப்போது, பதிவின் தொடக்கத்தில், குறிப்பிட்டுள்ள வேத மந்திரத்தில், நமது உடல் ஆரோக்கியத்திற்கான பிரார்த்தனையில், ஏன் முதலில் காதுகளைக் குறிப்பிட்டனர் என்பதை எண்ணிப் பாருங்கள்.)