No:9, 1st Main road, Swarnambigai Nagar, Aruneshwara Flats, Virugambakkam, Chennai
+91 98 777 888 02
info@bookmyiyer.com

Blog

நடக்கும் ஆட்டம் அவனுக்கு தெரியாமலா நடக்கிறது

நடக்கும் ஆட்டம் அவனுக்கு தெரியாமலா நடக்கிறது. ஏதோ ஒரு காரணத்தினால் அவன் நடத்துகிறான். இந்த ஆட்டத்தின் முடிவில் தர்மமே வெல்லும். நடக்கட்டும். அவனுக்கு மட்டுமே தெரிந்த சூட்சும ரகசியம். நாமெல்லாம் மாயையில் திளைத்து நிற்கின்றோம். என் உள் நீ; உன் உள் நான். ஏன் என்னை தேடி அலைகின்றாய் #தத்வமஸி. இதை உணருவோம். மாயையில் இருந்து அகலுவோம். சரணாகத வத்சலனே சரணம் ஐயப்பா. சரண கோஷப் பிரியனே சரணம் ஐயப்பா. சச்சிதானந்த பொருளே சரணம் ஐயப்பா. ஒன்றும்…
Read more

ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம வரலாறு.

இந்த கட்டுரையை எழுதியவர் விவரம் தெரியவில்லை. நீண்ட பதிவு……ஆனால் அவசியம் அறிந்து கொள்ள வேண்டியது… 🙏🙏 திரிலோக சஞ்சாரியும் தமிழ் மொழியை உண்டு பண்ணித் தமிழ் வளர்த்தவரும் சிறந்த சித்தரும் ஆகிய அகத்திய முனிவர்ஒருமுறை இமயமலைக்குச் சென்றார். அங்கு ஒரு இடத்தில் சில ரிஷிகள் தலைக்கீழாக தவம் செய்து கொண்டிருப்பதைகண்டார். அகத்தியர் அவர்களை பார்த்து “ரிஷிகளே தாங்கள் ஏன் இவளவு கடுமையான தவத்தைச் செய்து கொண்டு இருக்கீர்கள் ? காரணம் என்ன? ” என்று வினவினார். அதற்க்கு…
Read more

கங்கையில் குளித்தால் அனைவருக்கும் மோட்சம் என சொல்கிறார்களே?

ஒரு முறை “சிவனும் பார்வதியும்” பேசிக்கொண்டிருந்தார்கள்.அப்போது பார்வதி கேட்டார் . “ஐயனே கங்கையில் குளித்தால் அனைவருக்கும் மோட்சம் என சொல்கிறார்களே?குளிக்கும் அத்தனை பேரும் மோட்சத்துக்கு வந்தால் மோட்சம் தாங்காதே,அது ஏன் அப்படி நடக்கவில்லை? “ என கேட்டார். சிவன் சொன்னார் ”அது ஏன் எனும் காரணத்தை விளக்குகிறேன் என்னோடு வா,ஆனால் இப்படியே வராதே இருவரும் வயதான பெரியவர்களாக போவோம் வா” என அழைத்து சென்றார். கங்கைக்கரையினை அடைந்த சிவன் ”நான் இப்போது கங்கையில் விழுந்து விடுவேன் நீ…
Read more

காதுகளால் நாம் அடையும் பயன்

ஒரு வேதமந்திரம் இப்படித் தொடங்குகிறது: ப4த்3ரம்க1ர்ணேபி4ச்ருணுயாம_தே3வா: (எங்கள் காதுகளால் நாங்கள் நல்லவற்றையே கேட்க வேண்டும்). அதன் தொடர்ச்சி “ப4த்3ரம் ப1ச்யேம அக்ஷபி4ர் யஜத்1ரா:” (எங்கள் கண்களால் நாங்கள் நல்லவற்றையே காணவேண்டும்). இந்தப் பிரார்த்தனைக்கு முத்தாய்ப்பாக அமையும் வாக்யத்தைக் கவனியுங்கள்: ஸ்தி2ரைஹிஅங்கை3ஹிது1ஷ்டு1வாகு3ம்_ஸஸ்த1நூபி4ஹி (“காதுகளும் கண்களும் ஒழுங்காக இயங்குமானால், பிற உறுப்புகளும், முழு உடலும், ஸ்திரமாக (தடுமாற்றம் இல்லாமல்) அவ்வவற்றின் போக்கில் இயங்கும்” என்பது இதன் பொருள்.) இப்போது பதிவிற்குள் செல்லலாம். காது எதுக்கு இருக்கு என்று யாரையாவது கேட்டு…
Read more

கருப்பண்ணசாமி

கருப்பன், கருப்பணன், கருப்பு, கருப்பண்ணசாமி என்று பயபக்தியோடு வணங்கப்படும் துடியான கிராம காவல் தெய்வம், கருப்பசாமி. கறுப்பன் அமர்ந்த இடத்தைக் கொண்டு பல்வேறு விதமாய் கருப்பரை அழைப்பதுண்டு. சங்கிலி கறுப்பன், கறுப்பனார் சாமி, குல கறுப்பனார், பதினெட்டாம்படியான், சின்ன கருப்பசாமி, பெரிய கருப்பசாமி, மீனமலை கருப்பசாமி, முன்னோடை கருப்பசாமி, நொண்டி கருப்பசாமி, ஒண்டி கருப்பசாமி என கருப்பசாமி வழிபாடு தமிழ்நாட்டு கிராமங்களில் இருக்கின்றது. கருப்பன், கருப்புசாமி, கருப்பாயி எனும் பெயர்களைத் தென் தமிழர்கள் தம் குழந்தைகளுக்கு பெயராக…
Read more

சபரி மலை செல்வது ஒரு யாகம்

சபரிமலைக்கு அய்யன் தரிசனத்தின் போகும் போது நெய் கொண்டு செல்வது ஏன்? ஐயப்பனுக்கு காணிக்கையாய் கொடுக்க நெய் கொண்டு செல்வது காலம் காலமாய் இருந்து வருகிறது. இந்த வழக்கம் ஏன் ஏற்பட்டது தெரியுமா? இருமுடியில் நெய் நிறைத்து நெய்த்தேங்காய் சுமந்து செல்வதற்கு எனக்கு தெரிந்த வரை முன்று காரணங்கள் உள்ளன. முதல் இரண்டு காரணங்கள் புராண கதைகளை சார்ந்ததாகவும் , மூன்றாவது நமது வாழ்கையை சார்த்துமாய் உள்ளன. முதல் காரணம்: பந்தளராஜன் மனைவிக்கு தலைவலி ஏற்படுகிறது. உடனே…
Read more

கார்த்திகை பெண்களின் பெயர்கள் வேதத்தில் காணப்படுகிறது.

अम्बा (அம்பா),दुला ( துலா),नितत्नी (நிதத்னீ),मेघयन्ती (மேகயந்தீ),वर्षयन्ती (வர்ஷயந்தீ),अभ्रयन्ती (அபரயந்தீ). நக்ஷத்திர ஹோமங்கள் செய்யும் பொழுதும் கிருத்திகை நக்ஷத்திர உத்தேசம் செய்து ஹோமம் செய்யும் பொழுது இவர்களுக்கு ஆகுதி செய்யப் படுவது வழக்கில், மந்திரத்திலும் நாமங்கள் சொல்லப்பட்டு உள்ளது.

ஒரு மகத்தான சந்நிதி

சபரிமலைக்கு மற்றவர்கள் செல்லுகிறார்கள் என்று நாம் செல்லக்கூடாது. #சபரிமலை என்னைப் பொறுத்தவரை வாழ்க்கைக்கு வழிகாட்டி; நமது வாழ்க்கையை உயர செய்யும் ஒரு மகத்தான சந்நிதி. சபரிமலைக்கு விரதம் இருப்பது ,நமக்குள் இறைவனை உணர ஒரு பயிற்சி. அங்கு. கேளிக்கைகளுக்கோ, ஆடம்பரத்திற்கோ,நாம் பெரியவர் என்பதை காட்டுவதற்கு இடமில்லை. சில வருடங்களாக சபரிமலை அழைத்து செல்லுவது என்பது வியாபாரமாகிவிட்டது. உல்லாச பயணத்திற்கு எத்தனையோ இடங்கள் இந்தியாவில் உள்ளது. அங்கு சென்று சந்தோஷமாக. இருங்கள். சபரிமலை என்கிற புனிதமான பூமியில் வேண்டாமே!!…
Read more

மகாலட்சுமி கூட நரசிம்மர் அருகில் செல்ல பயந்தாள்

இரண்யனைக் கொல்வதற்காக நரசிம்மர் தூணில் இருந்து வெளிப்பட்டார். அதிபயங்கர உருவம்.சிங்க முகம்…மனித உடல்… இதுவரை பார்க்காத வித்தியாசமான அமைப்பு. இதைப் பார்த்தார்களோ இல்லையோ… இரண்யனின் பணியாட்கள் தங்கள் ஆயுதங்களைப் போட்டுவிட்டு ஓடிவிட்டனர். தனிமையில் நின்ற இரண்யனை மகாவிஷ்ணு அப்படியே தூக்கி மடியில் வைத்தார். குடலைப் பிடுங்கி மாலையாகப் போட்டார். இதைக் கண்டு வானவர்களே நடுங்கினர். அவர்கள் நரசிம்மரைத் துதித்து சாந்தியாகும்படி வேண்டினர். பயனில்லை. மகாலட்சுமி கூட அவர் அருகில் செல்ல பயந்தாள். “என் கணவரை இப்படி ஒரு…
Read more

கரிவலம்வந்தநல்லூர் கோயில் மண்டபக்கூரையில் வரையப்பட்ட ராசிமண்டலம்

தமிழர்கள் வானியலில் நாள்மீன் என அசுவினி, பரணி போன்ற நட்சத்திரங்களையும், கோள்மீன் என சூரியனை முதன்மையாகக் கொண்டு கோள்களையும், இவை சூழ்ந்து பவனி வரும் மேடம், இடபம், மிதுனம் எனும் மூன்று தெருவாக பன்னிரு ராசிகளையும் குறிக்கின்றனர். அந்த மூன்று வீதிகளில் தலா ஒன்பது நட்சத்திர இருக்கை வீதம் இருபத்து ஏழு நட்சத்திரங்களைக் கொண்ட வானில் ஒன்பது கோள்களும் வலம் வருகின்றன. சங்க இலக்கியகியங்களில் ஒன்றான பரிபாடலின் பதினொன்றாம் பாடல்இது வைகை ஆற்றில் தண்ணீர் வரும் காலம்…
Read more

Need Help? Chat with us
Please accept our privacy policy first to start a conversation.