No:9, 1st Main road, Swarnambigai Nagar, Aruneshwara Flats, Virugambakkam, Chennai
+91 98 777 888 02
info@bookmyiyer.com

மகாலட்சுமி கூட நரசிம்மர் அருகில் செல்ல பயந்தாள்

மகாலட்சுமி கூட நரசிம்மர் அருகில் செல்ல பயந்தாள்

இரண்யனைக் கொல்வதற்காக நரசிம்மர் தூணில் இருந்து வெளிப்பட்டார்.

அதிபயங்கர உருவம்.
சிங்க முகம்…
மனித உடல்…

இதுவரை பார்க்காத வித்தியாசமான அமைப்பு.

இதைப் பார்த்தார்களோ இல்லையோ…

இரண்யனின் பணியாட்கள் தங்கள் ஆயுதங்களைப் போட்டுவிட்டு ஓடிவிட்டனர்.

தனிமையில் நின்ற இரண்யனை மகாவிஷ்ணு அப்படியே தூக்கி மடியில் வைத்தார்.

குடலைப் பிடுங்கி மாலையாகப் போட்டார்.

இதைக் கண்டு வானவர்களே நடுங்கினர்.

அவர்கள் நரசிம்மரைத் துதித்து சாந்தியாகும்படி வேண்டினர்.

பயனில்லை.

மகாலட்சுமி கூட அவர் அருகில் செல்ல பயந்தாள்.

“என் கணவரை இப்படி ஒரு கோலத்தில் நான் பார்த்ததே இல்லை.

முதலில் யாரையாவது அனுப்பி அவரை சாந்தமாக்குங்கள், பிறகு நான் அருகில் செல்கிறேன்,” என்றாள்.

அவர் அருகில் செல்லும் தகுதி, பக்தனான பிரகலாதனுக்கு மட்டுமே இருந்தது.

தேவர்கள் அவனை நரசிம்மர் அருகில் அனுப்பினர்.

பிரகலாதன் நரசிம்மரைக் கண்டு கலங்கவில்லை.

அவனுக்காகத்தானே அவர் அங்கு வந்திருக்கிறார்!

தன்னருகே வந்த பிரகலாதனை நரசிம்மர் அள்ளி எடுத்தார்.

மடியில் வைத்து நாக்கால் நக்கினார்.

“பிரகலாதா! என்னை மன்னிப்பாயா?” என்றார்.

அவனுக்கு தூக்கி வாரிபோட்டது.

“சுவாமி! தாங்கள் ஏன் இவ்வளவு
பெரிய வார்த்தையைச்
சொல்லுகிறீர்கள்?” என்றான்.

“உன்னை நான் அதிகமாகவே
சோதித்து விட்டேன்.
சிறுவனான நீ, என் மீது கொண்ட பக்தியில் உறுதியாய் நிற்பதற்காக
பல கஷ்டங்களை அனுபவித்து விட்டாய்.

உன்னைக் காப்பாற்ற மிகவும் தாமதமாக வந்திருக்கிறேன்.

அதற்காகத்தான் மன்னிப்பு,” என்றார்.

இதைக்கேட்டு பிரகலாதனுக்கு கண்ணீர் வந்துவிட்டது.

“மகனே! என்னிடம் ஏதாவது வரம் கேள்,” என்ற நரசிம்மரிடம்,

பிரகலாதன்,”ஐயனே! ஆசைகள் என் மனதில் தோன்றவே கூடாது,” என்றான்.

பணம் வேண்டும், பொருள் வேண்டும் என அந்த மன்னாதி மன்னன் கேட்டிருக்கலாம்.

ஆனால், ஆசை வேண்டாம் என்றான் பிரகலாதன்.

குருகுலத்தில் அவன் கற்றது சம்பாதிக்க அல்ல!

பண்பாட்டை வளர்த்துக் கொள்வதற்கு!

பிரகலாதனின் இந்தப் பேச்சு நரசிம்மரின் மனதை உருக்கிவிட்டது.

பகவானைக் கண்டு பக்தன் தான் உருகுவான்.

இங்கோ கோபமாய் வந்து, வேகமாய் இரண்யனின் உயிரெடுத்த பகவான் பக்தனைக் கண்டு உருகி சாந்தமாகிப் போனான் நரசிம்மப் பெருமான்.

“இந்த சின்ன வயதில் எவ்வளவு நல்ல மனது!
ஆசை வேண்டாம் என்கிறானே!”

ஆனாலும், அவர் விடவில்லை.

விடாமல் அவனைக் கேட்டார்.

“இல்லையில்லை!

ஏதாவது நீ கேட்டுத்தான் ஆக வேண்டும்,”.

பகவானே இப்படி சொல்கிறார் என்றால்,
“தன் மனதில் ஏதோ ஆசை இருக்கத்தான் வேண்டும்” என்று முடிவெடுத்த பிரகலாதன்,

“இறைவா! என் தந்தை உங்களை நிந்தித்து விட்டார்.

அதற்காக அவரைத் தண்டித்து விடாதீர்கள். அவருக்கு வைகுண்டம் அளியுங்கள்,” என்றான்.

நரசிம்மர் அவனிடம்,

“பிரகலாதா! உன் தந்தை மட்டுமல்ல!

உன்னைப் போல நல்ல பிள்ளைகளைப் பெற்ற தந்தையர் தவறே செய்தாலும், அவர்கள் பரமபதத்திற்கு வந்துவிடுவார்கள்.

அவர்களின் 21 தலைமுறையினரும் புனிதமடைவர்,” என்றார்.

நல்ல பிள்ளைகள் அமைந்தால் பெற்றவர்களுக்கு மட்டுமில்லை.

அவர்களது வருங்கால சந்ததிக்கும் நல்லது.

படித்ததில் நெகிழ்ந்தேன்.🙏🙏🙏🙏🙏

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Need Help? Chat with us
Please accept our privacy policy first to start a conversation.